இணையப் பயணம்

 

2013 ஆம் ஆண்டு. நவம்பர் மாதம் என்று தான் நினைகின்றேன். துல்லியமாக அந்த நாள் என் நினைவில் இல்லை. அதுவொரு ஞாயிற்றுக் கிழமை. மனைவியும் குழந்தைகளும் மதிய தூக்கத்தை நிம்மதியாக அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். எப்போதும் போல என் இணையப் பயணம் தொடங்கியது. நான் திருப்பூரில் பணிபுரியும் சூழலில் என்னால் முழுமையாக எழுத முடிவதும், அதிக நேரம் இணையத்திற்கு ஒதுக்க முடிவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் எழுதப்பட்டது தான் என் அனைத்து வலைபதிவு கட்டுரைகளும் என்பதை நான் உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை தானே?

காரணம் தேவியர்கள் தூங்கிய பின்பு தான் கணினி என் கைக்கு வரும். அப்போது தான் சீனிவாசன் உருவாக்கி இருந்த மின் நூல் தளம் குறித்து அவர் அறிமுகப்படுத்தி எழுதிய வாசகங்கள் என் கண்களுக்கு தென்பட்டது.

தமிழ் மொழி குறித்து, அதன் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கான சிந்தனைகளை எங்கு படித்தாலும் எவர் எழுதி இருந்தாலும் அதனை என் முகநூலில், கூகுள் ப்ளஸ்ல் பகிர்ந்து விடுவதுண்டு.

யாரோ ஒருவரின் கண்களுக்கு தென்படும் எங்கிருந்து உதவிக்கரம் கிடைக்கும் என்றே நம்மால் யூகிக்க முடியாது அல்லவா? அதிர்ஷ்டவசமாக சீனிவாசன் அவர் அலைபேசி எண் கொடுத்து இருந்தார்.

தினந்தோறும் நான் பணிபுரியும் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான பேர்களை கையாளுவதால் புதிய நபர்களுடன் உரையாடுவது என்பது எனக்கு எப்போது இயல்பான காரியம். உள்ளூர் எண் என்பதால் பேசிவிடலாம் என்பதற்காக அவரை அழைத்தேன். ஆச்சரியம் என்னவென்றால் சீனிவாசனின் சென்னை அலுவலகம் வாயிலாக அப்போது அவர் இருந்த அமெரிக்காவிற்கு அந்த அழைப்பு சென்றது

நான் பேசிய சில நிமிடங்களில் நீண்ட நாள் பழகியவர் போல அவர் பேசிய பேச்சுக்கள் எனக்கு நம்பிக்கை அளித்தது. அப்போது அவர் உருவாக்கியிருந்த மின் நூல் தளம் என்பது அவருக்கு பாதி நம்பிக்கையை தான் கொடுத்து இருந்தது. அவர் பேச்சில் சற்று சோர்வு தெரிந்தது. அவரின் குடும்ப பின்புலத்தையுமவிசாரித்த பின்பு நிச்சயம் இவருக்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும் என்று என் மனதில் தோன்றியது.

உற்சாகத்துடன் அவர் செயல்பாடுகளை பாராட்டினேன். என் வார்த்தைகள் அவருக்கு இனம் புரியாத உற்சாகத்தை தந்து இருக்க வேண்டும் என்பதை அவர் தொடர் உரையாடலின் வாயிலாக புரிந்து கொண்டேன். நான் உங்கள் பின்னால் இருப்பேன்’ என்று உறுதியளித்தேன்.

எனக்கு கணினி சார்ந்த தொழில் நுட்பங்கள் எதுவும தெரியாது. அதில் ஆர்வமும் இல்லை. ஒரு மணி நேரத்தில் ஆயிரம் வார்த்தைகள் என்றாலும் அசராமல் குழந்தைகள் தொந்தரவை பொறுத்துக் கொண்டு மனதில் ஓடும் ேகமான யோசனைகளை டைப்படிக்க மட்டும் தான் தெரியும். அதன்படி என் நெருக்கடியான பணிச்சூழலுக்கிடையே சீனிவாசனுக்கு அளித்த வாக்குறுதியின்படி என் முதல் மின் நூலை தயாரித்துக் கொடுத்தேன்.

ஈழம் வந்தார்கள் வென்றார்கள்” டிசம்பர் 19 2013 அன்று வெளியிடப்பட்டது.

ஒரு ாரியம் தொடங்கி முடியும் வரைக்கும் அது என்னைப் பொறுத்தவரையிலும் முதல் பிரசவ சமாச்சாரம் தான். ஒவ்வொரு காரியத்தையும் முழு அர்ப்பணிப்புடன் தொடங்குவேன். ஒவ்வொரு நாளும் புதிய நாளாகத் கருதுவேன். அதையே தொடர்வேன்.

சீனிவாசன் என் விருப்பத்தை சரியாக நிறைவேற்றினார். ன் முதல் மின் நூலுக்கு நான் எதிர்பார்க்காத வரவேற்பு கிடைத்து. வலைபதிவு மூலம் எனக்கு நெருக்கமான தொடர்பில் இருந்த பலருக்கும் மின் நூல் தளத்தை தெரியப்படுத்துவதில் என்னால் முடிந்த அளவுக்கு செயல்படுத்தி காண்பித்தேன்.

நான் சீனிவாசனிடம் கொடுத்த வாக்குறுதியின் படி என் தேவியர் இல்லம் வலைபதிவில் வெளியான கட்டுரைகளை தொகுத்து அடுத்தடுத்து நான்கு மின் நூல்களை அளித்தேன். எல்லா நூல்களுக்கும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பு கிடைத்து. இது போதும் என்று நிறுத்தி விட்டேன்.

ஆனால் தொடர்ந்து மின் நூல் தளத்தில் வெளியாகிக் ொண்டிருந்த ஒவ்வொரு மின் நூல்களையும் ஒரு வாசகனாக கவனித்துக் கொண்டே வந்தேன். வெகுஜன எழுத்தாளர்கள் என்கிற ரீதியில் மின் நூல்தளத்திற்கு ஆதரவு தருகின்றோம் என்கிற வகையில் உள்ளே வந்தவர்களின் உண்மையான முகத்தையும் கவனித்துக் கொண்டே தான் வந்தேன்.

தளம் தொடங்கி ஒரு வருடம் முழுமையாக முடிந்து அந்த வெற்றியைக் கொண்டாடியவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்ததோடு சமீபத்தில் வெளியான இதில் பங்கெடுத்த இளையர் குழுவினர் பட்டியலைப் பார்த்த போது எனக்கு ஆச்சரியம் அதிகமானது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொருவரும் கணினி சார்ந்த துறையில் தான் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். மென்பொருள் துறையில் வேலை நெருக்கடி இருந்த போதிலும் அடிப்படையில் ஒருவித சுகவாசிகளாக மாறிவிடும் பலரையும் பார்த்த காரணத்தினால் இந்த தள ஆக்கத்திற்காக உழைத்த அத்தனை பேர்களின் முழு விபரத்தையும் படித்து முடித்த போது ஆச்சரியமாக இருந்தது.

இத்தனை பேர்கள் இதற்குப் பின்னால் இருக்கின்றார்களா? என்று எண்ணம் என்னுள் உருவானது.

இவர்களின் கடந்த ஒரு வருட உழைப்பிற்கு நம்மால் முடிந்த ஒரு உதவியைச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. சீனிவாசனிடம் பேசினேன்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கும் பல ஆயிரம் தமிழர்களைப் போல இதில் பட்டியலிட்டுள்ள ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினர் ஒத்துழைப்போடு தங்கள் நெருக்கடியான பணிச்சூழலுக்கிடையே தங்களால் முடிந்த பணியைச் செய்து உள்ளார்கள்.

இதில் உள்ள அத்தனை ேர்களுக்கும் குடும்ப கடமைகள் உள்ளது. பொருளாதார சவால்கள் உள்ளது. கடுமையான பணிச்சூழலில் தங்களை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். தாங்கள் வாழும் போது ஏதாவது ஒன்றை தாங்கள் வாழும் சமூகத்திற்கு ஒழுங்காக செய்து கொடுத்து விட்டு நகர்ந்து விட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளனர். அவரவருக்கு தெரிந்த வகையில் ஏதோவொரு வகையில் தங்கள் சமூகப் பணியை சிறப்பாகவே செய்து உள்ளனர்.

ஒருவர் உருவாக்கப்பட்ட படைப்பு என்பது காகித வடிவில் இருந்தால் கூட காலம் மறந்து விட வாய்ப்புள்ளது. ஆனால் இணையம் என்பது இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்களை சந்தித்தாலும் யாரோ ஒருவரின் படைப்பு மற்றொருவர் பார்வையில் படத்தான் போகின்றது. தமிழ் மொழி அழிந்து விடப் போகின்றது போன்ற கூக்குரல்களைத் தாண்டியும் வணிக ரீதியான சாத்தியக் கூறுகள் இந்த மொழியை வாழ வைத்துக் கொண்டு தான் இருக்கப் போகின்றது. இந்தக் குழுவினர் உழைப்பில் வெளி வந்துள்ள அத்தனை மின் நூல்களும் இந்தத் தளம் வாயிலாக யாரோ ஒருவர் கண்ணில் பட்டுக் கொண்டே தான் இருக்கப் போகின்றது.

இன்னும் நாலைந்து தலைமுறைகள் கழித்து ஒரு இளைஞர் ஒரு மின் நூல் புத்தகத்தை தரவிறக்கம் செய்து வாசிக்கும் போது இந்தக் குழுவில் உள்ளவர்களின் முகமோ முகவரியோ தெரியாத போதும் கூட வாசித்த பின்பு அவர்கள் அடைந்த ஆத்மதிருப்தி இவர்களின் வாரிசுகளுக்கு ஆசிர்வாதமாக வந்து சேரப் போகின்றது என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.

இந்த மின்நூல் தளத்தை உருவாக்கியவர், உருவாக்க காரணமாக இருந்தவர், ஆக்கப் பூர்வமான செயல்பாட்டின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர், குழு உருவாக காரணமாக இருந்தவர், குழுவிற்கு வழிகாட்டியாக இருந்தவர், தள மேம்பாட்டிற்காக தொடர்ந்து தங்கள் உழைப்பை வழங்கிக் கொண்டிருப்பவர்கள் என்று அத்தனை உள்ளங்களும் எனது ஐந்தாவது மின் நூலான பயத்தோடு வாழ பழகிக் கொள் என்ற இந்த மின் நூலை காணிக்கையாக்குகின்றேன். என் மின் நூலை வாசிக்க வந்த உங்களுக்கு இளையர் பட்டாளத்தை அறிமுகம் செய்து வைப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.

நன்றி.

http://freetamilebooks.com/

முதல் ஆண்டில் மகத்தான சாதனை செய்துள்ள இளையர் கூட்டம்.

1. பிரியா

இவர் IIT Mumbai ல் பணிபுரிகிறார். priya

பங்களிப்புமின்னூலாக்கம்

மின்னஞ்சல்priyacst@gmail.com

2. இராஜேஸ்வரி raji

ஆஸ்திரேலியாவில் வாழும் கணிணி வல்லுனர். முன்னாள் கல்லூரி ஆசிரியர். பங்களிப்புமின்னூலாக்கம்

மின்னஞ்சல்sraji.me@gmail.com

3. து. நித்யா

சென்னை Cognizant ிறுவனத்தில் பணிபுரியும் கணிணி வல்லுனர். nithya

பங்களிப்புமின்னூலாக்கம், தமிழில் கணிணி நூல் எழுதுதல்

மின்னஞ்சல்nithyadurai87@gmail.com

4. சிவமுருகன் பெருமாள் sivamurugan

அமெரிக்க வாழ் கணிணி நிபுணர்

பங்களிப்பு – மின்னூலாக்கம்

மின்னஞ்சல்sivamurugan.perumal@gmail.com

5. கிஷோர்

சிங்கப்பூர் வாழ் iOS நிபணர்

பங்களிப்புFreeTamilEbooks க்கு iOS மென்பொருள் உருவாக்கம்

மின்னஞ்சல்ukisho@gmail.com

ஜெயேந்திரன் சுப்பிரமணியம் Jayendran

சொந்த ஊர் ஈரோடு மாவட்டதில் உள்ள வெள்ளோட்டாம்பரப்பு. சோனா பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு தற்பொழுது ஒரு தனியார் மென்பொருள் சேவை நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பூனேயில் பணியாற்றிவருகிறார் . பொழுதுபோக்கு திரைப்படங்கள் பார்ப்பது , பாடல்கள் கேட்பது, தொழில்நுட்பம் பற்றி இணையத்தில் உலாவுதல், புத்தகங்கள்(ஆங்கிலம் மற்றும் தமிழ் புதினங்கள்) படிப்பது. தற்பொழுது freetamilebooks.com இல் பங்களிக்கிறார்.

பங்களிப்புமின்னூலாக்கம்

மின்னஞ்சல்vsr.jayendran@gmail.com

ப்ரியமுடன் வசந்த் vasanth

அரபு நாட்டில் வசிக்கும் வரை கலைஞர்

பங்களிப்புஅட்டைப்படம் உருவாக்கம்

மின்னஞ்சல்vasanth1717@gmail.com

ஜெகதீஸ்வரன்

ஜெகதீஸ்வரன், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூரில் பிறந்தவர். தற்போது கணினி மென்பொருள் எழுதுனனாக சென்னையில் பணியாற்றி வருகிறார். இணைய இதழ்களிலும் வலைப்பூக்களிலும் கதை, கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர். விக்கிப்பீடியாவில் பொன்னியின் செல்வன் புதினம் தொடர்பான நாற்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை மற்றும் திரைப்பட வாழ்க்கை, பேட்வுமன், பேட்கேர்ள் போன்ற பல கட்டுரைகளையும் எழுதியுள்ளர். சோழர், பொன்னியின் செல்வன், பேட்மேன் என சில வார்ப்புருக்களை வடிவமைத்துள்ள இவர், விகடன் குழும இதழ்களின் அட்டைப் படங்களையும், பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களின் ஓவியங்களையும் பதிவேற்றியுள்ளார்.

https://ta.wikipedia.org/s/2c3w

பங்களிப்புஅட்டைப்படம் உருவாக்கம்

மின்னஞ்சல்sagotharan.jagadeeswaran@gmail.com

லெனின் குருசாமி lenin

காரைக்குடியில் வாழும் வரைகலைஞர். M.Sc முடித்து விட்டு தற்பொழுது Sun Creations – Powered by Open Source (Printing, Designing and Cyber Cafe centre) மையத்தை இயக்கி வருகிறார்.

பங்களிப்புஅட்டைப்படம் உருவாக்கம்

மின்னஞ்சல்guruleninn@gmail.com

மு. சிவலிங்கம்

ஒரு தமிழகத்தைச் சேர்ந்த கணினி சார் தொழில்நுட்ப எழுத்தாளர். இந்திய அரசின் தொலைத்தகவல் தொடர்புத் துறையில் 33 ஆண்டு காலம் பொறியாளராகப் பணியாற்றி 2007 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்ற இவர் கணிதம், தமிழ் இலக்கியம், தொழிலாளர் சட்டம், மனிதவள மேம்பாடு மேலாண்மை, கணினிப் பயன்பாட்டு அறிவியல் போன்ற பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இவர் கணினி தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டு பல ஆய்வுக் கட்டுரைகளையும் படித்துள்ளார்.பல ஆண்டுகளாக கணிணி துறை நூல்களை தமிழில் எழுதி, பலரும் கணிணி துறையில் நுழைய ஆசிரியராக இருப்பவர்.

https://ta.wikipedia.org/s/2k9o

பங்களிப்புபல்வேறு எழுத்துருக்களில் வரும் மின்னூல்களை ஒருங்குறியாக்கம் செய்தல்

மின்னஞ்சல்musivalingam@gmail.com

11. மனோஜ் குமார் manoj

கோவையில் உள்ள வரை கலைஞர்

பங்களிப்புஅட்டைப்படம் உருவாக்கம்

மின்னஞ்சல்socrates1857@gmail.com

12. கலீல் ஜாகீர்

விழுப்புரத்தைச் சேர்ந்த கட்டற்ற மென்பொருள் ஆர்வலர். ஆன்டிராய்டு மென்பொருள் உருவாக்குபவர்khaleel

பங்களிப்புஆன்டிராய்டு செயலி உருவாக்கம்

மின்னஞ்சல்jskcse4@gmail.com

13. . இரவிசங்கர

புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ் விக்கிபீடியா பங்களிப்பாளர். ravi

பங்களிப்புfreetamilebooks.com வலைத்தள மேலாண்மை, திட்ட ஒருங்கிணைப்பு, பரப்புரை.

மின்னஞ்சல்ravidreams@gmail.com

14. .சீனிவாசன்

சென்னையில் வாழும் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர். shrini

பங்களிப்புமின்னூலாக்கம், மின்னூல் வெளியீடு, பரப்புரை

மின்னஞ்சல்tshrinivasan@gmail.com

நன்றி

பயத்தோடு வாழ பழகிக் கொள் அட்டைப்படம் உருவாக்கியவர்

திரு. மனோஜ் குமார். Manoj penworks

மின் நூலில் பயன்படுத்தியுள்ள (சில) படங்கள்

https://www.facebook.com/oochappan

இதுவரையிலும் வெளிவந்துள்ள என் மின் நூல்கள்

  1. ஈழம் வந்தார்கள் வென்றார்கள்

ஈழம் என்ற நாடு என்று உருவானது என்பதில் தொடங்கி தமிழர்கள் எப்படி அரசியல் அதிகாரத்தை விட்டு துரத்தப்பட்டார்கள் என்பது வரைக்கும் உண்டான சரித்திர நிகழ்வுகளை அலசும் தொடர்.

http://freetamilebooks.com/ebooks/ezham-vandhargal-vendrargal/

தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 26,924

வெளியிட்ட தினம் 19.12.2013

  1. வெள்ளை அடிமைகள்

இந்தியாவில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பத்தாண்டுகளில் படிப்படியாக மேலைநாடுகளுக்கு இந்தியா எப்படி அடகு வைக்கப்பட்டது ன்பதைப் பற்றியும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பராம்பரியம் உள்ள தமிழர்களின் வரலாற்றை அலசும் தொடர்

http://freetamilebooks.com/ebooks/white-slaves/

தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 6,458

வெளியிட்ட தினம் 29.01.2014

  1. தமிழர் தேசம்

தமிழ் மன்னர்களான சேர சோழ பாண்டியர்களின் வரலாற்றுக்கதையை சுருக்கமாக பேசி, நான் பிறந்த இராமநாதபுரம் மாவட்டம் படிப்படியாக எப்படி மாறியது என்பதை சரித்திர பின்புலத்தில் அலசும் தொடர்.

http://freetamilebooks.com/ebooks/tamilar-desam/

தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 7631

வெளியிட்ட தினம் 28.02.2014

  1. கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு

தமிழ்நாடு மற்றும் இந்தியா இது தவிர நான் வாழ்ந்து கொண்டிருக்கும் திருப்பூரில் நான் பார்த்து வந்து கொண்டிருக்கும் சுற்றுப்புற சீர்கேடுகளைப் பற்றி அனுபவத் தொடர் வாயிலாக அலசும் தொடர். மேலும் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாட்டை உருவாக்கப் போகும் மரபணு மாற்றம் குறித்து பேசியிருக்கின்றேன். முழு விபரங்களைப் படிக்க தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்களேன்.

http://freetamilebooks.com/ebooks/konjam-soru-konjam-varalaru/

தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 10,928

வெயிட்ட தினம் 27.03.2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *