31 500

 

வணக்கம் நண்பர்களே

இது என்னுடைய 500 வது பதிவு.

எனக்கு இந்த வலையுலகம் வேர்ட்ப்ரஸ் மூலம் அறிமுகம் ஆன நாள் மே மாதம் 2009

2002 முதல் என் ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறை தொழில் வாழ்க்கையில் இணையம் என்பது தினந்தோறும் 12 மணி நேரத்திற்கும் மேலாக என் வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்து இருந்த போதிலும் 2009 ஆம் ஆண்டுத் தான் தமிழ் இணையம் என்பது எனக்கு அறிமுகம் ஆனது.

என்னுடைய முதல் பதிவு வேர்ட்ப்ரஸ் ல் ஜுலை 3 2009 அன்று எழுதி வெளியிட்டேன். நண்பர் நாகாவின் வேண்டுகோளுக்கினங்க அவர் உருவாக்கித் தந்த இந்த ப்ளாக்கர் என்ற தளத்தின் மூலம் செப்டம்பர் 26 2009 முதல் எழுதி வருகின்றேன்.

பதிவின் நீளம், அகலம், உயரம், எழுத்துப்பிழைகள், வாக்கியப் பிழைகள், புரியாத தன்மை, விவரிக்கும் பாங்கு என்று தட்டுத்தடுமாறி ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டு இன்று இந்த நிலை வரைக்கும் உயர்ந்து வந்துள்ளேன். திருப்பூரில் எனக்கு முன்னால் எழுதியவர்கள் அநேகம் பேர்கள். பலருக்கும் தொழில் வாழ்க்கையின் காரணமாகப் படிப்படியாகத் தங்களைச் சுருக்கிக் கொண்டார்கள்.

இன்று வரையிலும் எனக்குத் தெரிந்தவகையில் சோர்வடையாமல் என்னைப் பாதிக்கும் ஒவ்வொன்றையும் பதிவுகளாக மாற்றிக் கொண்டே வருகின்றேன்.

என்னுடைய எழுத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்கள் எனக்கு நெருக்கமான உறவுகளாகவும் மாறியுள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு இடத்திலும் யாரோ ஒருவர் எனக்கு நெருக்கமான சொந்தமாக மாறியுள்ளனர். அனைத்து கட்சிகளிலும் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நெருக்கம் பாராட்டுபவர்கள் அநேகம் பேர்கள். ஊடகத் துறையிலும் அதிகம் பேர்கள் அறிமுகமாகி உள்ளனர். பலதரப்பட்ட இயக்கம் சார்ந்த கொள்கைகள் கொண்டவர்களுடன் நட்பு கொள்ளவும் முடிந்துள்ளது. பிரபல எழுத்தாளர்கள், பதிப்பக மக்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள் என்று பல தரப்பட்ட நிலையில் பலரையும் தொடர்பில் வைத்திருக்க முடிந்துள்ளது.

ஒவ்வொரு அனுபவமும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பாடங்களைக் கற்றுத் தந்து கொண்டேயிருக்கின்றது. ஒவ்வொரு நிலையிலும் எண்ணம் போல வாழ்வு என்பதனையும், தீதும் நன்றும் பிறர் தர வரா என்ற முதுமொழியையும் மனதில் வைத்துக் கொண்டே நகர்ந்து கொண்டு இருக்கின்றேன்.

நான் கடந்து வந்த இந்த நான்கு வருடத்தில் என் தளத்தைத் தவிர்த்து வினவு தளம், சிறகு தளம், தமிழ்ப் பேப்பர் போன்ற தளங்களில் என் கட்டுரைகள் வந்துள்ளது. வெகுஜன பத்திரிக்கையான புதிய தலைமுறையில் எனது சாய்ப்பட்டறை குறித்து மூடு என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரையாக (கவர் ஸ்டோரி) வந்துள்ளது. ஆழம் பத்திரிக்கையில் இதுவரையிலும் மூன்று கட்டுரைகள் வெளியாகி உள்ளது. அதிக அளவு 4 தமிழ் மீடியா குழுமத்தில் எனது கட்டுரைகள் வெளியாகி உள்ளது.

வலைச்சரத்தில் இதுவரையிலும் இரண்டு முறை சீனா அவர்கள் என்னை வலைச்சரம் ஆசிரியர் பணியில் அமர்த்தி வைத்து அழகு பார்த்ததோடு முழுமையான சுதந்திரத்தையும் அளித்து ஊக்கப்படுத்தினார். சிலருக்கு ஊக்கத்தையும் பலருக்கு தாக்கத்தையும் இதன் மூலம் ஏற்படுத்த முடிந்தது. நான் சார்ந்திருக்கும் ஏற்றுமதி தொழில் வாழ்க்கைச் சூழலில் இந்த எழுத்து வாழ்க்கையில் முனைப்பாகச் செயல்பட வாய்ப்பில்லாத காரணத்தால் பத்திரிக்கையில் தொடர்ந்து எழுத வாய்ப்பில்லாது நகர்ந்து கொண்டேயிருக்கின்றேன்.

கூகுள் தளத்தின் வாயிலாக நேரிடையாகத் தளத்திற்கவருபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு சமயத்திலும் கூகுள் தேடுதல் சேவையின் வாயிலாகக் குறி சொற்கள் மூலம் தேடிக் கொண்டுருக்கும் பலருக்கும் எனது தளம் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றது. ஒரு வட்டத்திற்குள் இல்லாத எனது சிந்தனைகள் பல விதங்களில் என் எழுத்துலகப் பயணத்திற்கு உரமாக உள்ளது. இன்று வரையிலும் பழைய பதிவுகளைப் படித்து விட்டுக் கடிதம் எழுதுபவர்களும், என்னைச் சந்திக்கும் தருணத்தில் மகிழ்ச்சியுடன் அதனைப் பற்றிப் பகிர்ந்து கொண்டவர்களும் அதிகம்.

இந்தத் தளத்தை நாற்பது வயதை தொட இருப்பவர்களும், கடந்தவர்களும் என்று தொடங்கி 70 வயது வரைக்கும் இருக்கும் பலரின் விருப்பமான தளமாக உள்ளது. நான் எழுதத் தொடங்கிய பிறகே வாழ்க்கையை அதிக அளவு ரசிக்கவும், அன்றாட வாழ்க்கையை அனுபவித்து வாழவும் கற்றுள்ளேன். இந்த வலையுலகப் பயணத்தில் எழுத்துப் பயணத்தோடு சில உருப்படியான களப்பணிகளையும் செய்ய முடிந்துள்ளது.

புதுக்கோட்டையில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆய்வு நூலகமான ஞானாலயாவை தமிழ் இணையத்தில் அதிக அளவுக்குக் கொண்டு சேர்த்துள்ளேன். திருப்பூரில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளி குறித்து அதன் நிதி ஆதாரங்களைக் கண்டு நண்பர்களிடத்தில் பகிர்ந்து சிறிய அளவு நிதி ஆதாரங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளேன். இந்தப் பள்ளியின் வளர்ச்சியில் தேவைப்படும் நிதிக்காகப் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றேன்.

வலைதளத்தில் எழுதத் தொடங்கிய போது குழப்பமான சிந்தனைகளை அதிகம் பெற்றிருந்த போது தேவியர்கள் பள்ளிக்கு செல்லத் தொடங்கியிருந்தார்கள். இன்று நான்காம் வகுப்பு முடிந்து அடுத்த வகுப்புகக்கு செல்ல தேவியர்கள் கல்வியில் முதல் தரத்திலும், தமிழ் வாசிப்பு எழுத்துப் பயிற்சியில் முதன்மை தரத்திலும் இருக்கின்றார்கள். மனைவியின் ஆதரவு ப்போதும் போல இயல்பாக இருப்பதால் இந்த வாழ்க்கையை ரசனைக்குரியதாகத் தினந்தோறும் உருவாக்கிக் கொள்ள முடிகின்றது.

ஒவ்வொரு பிரபல்ய எழுத்தாளர்களும் வாசகர் கடிதம் என்று ஒன்றை வெளியிட்டு அதற்கு அவர்களும் பதில் அளித்துருப்பதை நீங்கள் படித்து இருக்கக்கூடும். அது குறித்த முரண்பட்ட தகவல்கள் நிறைய உண்டு. எனக்கும் வலைபதிவில் விமர்சனம் கொடுக்காமல் தனிப்பட்ட முறையில் மின் அஞ்சல் வழியே தங்கள் அன்பை, ஆச்சரியத்தை வெளிப்படுத்தியவர்கள் அநேகம் பேர்கள். அவர்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது உண்டு.

கடந்த மார்ச் 23 ந் தேதி அன்று வந்த ஒரு நண்பரின் கடிதத்தைப் பெயர் தவிர்த்து அவர் எழுதிய மொழியிலேயே இங்கு வெளியிடுகின்றேன். இதுவும் ஒரு வகையில் அங்கீகாரம் தான்.

மொழி பெயர்ப்புச் செய்யாமல் வெளியிட காரணம் நண்பர் ஒருவர் மூச்சுக்கு மூச்சுத் தமிழ் என்று ஏன் புலம்புகின்றீர் என்றார். அவருக்கு இதை டெடிகேட் செய்கின்றேன். போதுமா நண்பா? ஆதரவளித்த ஆதரவளிக்கும் அத்தனை வாசிப்பாளர்களுக்கும் என் நன்றிகளை இங்கே எழுதி வைக்கின்றேன். (26.03.2013)

Dear Jothi Ganesan,

Well and wish the same. You may be surprised to receive this e-mail after a long interval. Due to my personal health problems I discontinued posting my writings in the web and stayed away from the web for some time.

Very recently I had the chance to read some of your article on Eelam Tamil issue. Those articles forced me to write this e-mail.

Dear Jothigy your investigative journalism have exposed many influential people to the web readers. You have touched very sensitive nerves of the higher ups. Exposing their design and their manipulations to amesh wealth and fame have angered many of them. Due to this I fear for your safety and well being. Anything can happen to anyone in India.

Please show some restraint in exposing those elements. I have personal bitter experience in this type of matter in SriLanka. That is why I am requesting you to be cautious. Your personal safety is very important to your family. Particularly to your wife and children.

I hope that you can understand my fear as a co writer in the web. I have preserved many of your article in a separate external hard disc.

So far no one has written with facts and proof in their articles. I am proud of you. I am living in Toronto, Canada. After serving in the Royal Bank of Canada

I am retired now. I have only one daughter who is married and settled here. I am enjoying my retired life by visiting distance land in the globe. If I come to India I wish to meet you.

Please be cautious and alert. My best wishes and blessings to your wife and children. My best wishes and blessing for all your future endeavor.

Take care.

நேரம் ஒதுக்கி முழுமையாக வாசித்த உங்களுக்கு என் நன்றி.

நட்புடன்

ஜோதிஜி திருப்பூர்.

மின் அஞ்சல் முகவரி texlords@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *