25 மதமாற்றம் — விளிம்பு நிலை மனிதர்கள்

 

ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறுதல் என்பது எனக்கு ஆச்சரியமாகத் தெரியவில்லை. அது அவரவர் மகிழ்ச்சி அல்லது விருப்பம் என்பதாக எடுத்துக் கொள்ள முடிகின்றது. ஆனால் வேறொரு மதத்திற்கு மாற்றும் போது என்னவெல்லாம் சொல்லி மாற்றுகின்றார்கள் என்பது தான் கொடுமையாகக் கொடூரமாகத் தெரிகின்றது.

தீவிரவாதத்திற்கு மூளைச்சலவை செய்து உருவாக்குகிறார்கள் என்பதைப் போலத் தான் தற்போது தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டுருக்கின்றது. இங்கே தற்போது நடந்து கொண்டுருக்கும் மதமாற்றங்கள் ஒரு முடிவில்லா குழப்பத்திற்கே கொண்டு சென்று விடுமோ? என்று தோன்றுகின்றது. இன்று அதிக அளவில் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றிக் கொண்டுருக்கிறார்கள். கடைசிப் புகலிடம் என்பதாக மக்களும் நம்புகிறார்கள்.

ஒவ்வொரு நகர்புறத்திலும் நடந்து கொண்டுருந்த மதமாற்ற நிகழ்ச்சிகள் இன்று புறநகர் பகுதிகளுக்குச் சென்றுவிட்டது. காரணம் உருவாகும் பிரச்சனைகள் அதிக அளவில் இருப்பதால் ஆட்சியாளர்களும் இந்தக் கூத்துக்களைக் கண்டு கொள்ள விரும்புவதில்லை. மதத்தைத் தொட்டால் மட்டுமல்ல பேசினாலே ஷாக் அடிக்கும் விசயமல்லவா? அதற்கு மேலும் கேட்டாலும் இருக்கவே இருக்கு தனிநபர் சுதந்திரம் என்று வாயை அடைத்து விடுவார்கள்.

ஆனால் மதம் மாறும் பெரும்பான்மையோர் அததனை பேர்களும் பொருளாதார ரீதியில் விளிம்புநிலை மனிதர்களாகவே இருக்கிறார்கள். இவர்களுக்குக் கொடுக்கப்படும் வாக்குறுதிகள், வழங்கப்படும் உதவிகள் தான் இந்த மதமாற்றத்தை விரைவு படுத்துகின்றது. தங்களின் அத்தனை பிரச்சனைகளும் கர்த்தர் காத்தருள்வார் என்று செல்பவர்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடுகின்றதா?

இந்து மதத்தில் இருக்கும் சாதீயத்தால் நாங்கள் மதம் மாறுகின்றோம் என்று கடநத இரண்டு நூற்றாண்டுகளாக இஸ்லாம், கிறிஸ்துவம் வளர்ந்தது. ஒரு ஊரே மாறும் போது அதன் தாக்கம் என்பது வேறு. ஒரு தனிப்பட்ட மனிதர்கள் அதுவும் வாழ்வில் நல்ல நிலையில் இருப்பவர்கள் மாறும் போது உருவாகும் பிரச்சனைகள் என்பது வேறு. சுற்றிலும் உள்ள உறவுகளால் தனிமைப்படுத்தப்பட்டு, எதிர்ப்புகளை மீறி காதலித்துக் கரை சேர முடியாதவர்களைப் போலப் பலரின் வாழ்க்கையும் அல்லாடிப் போய்விடுகின்றது.

திருப்பூர், கோவை, மாவட்டங்க்ளில் கடந்த நாலைந்து வருடங்களாக இருந்த இது போன்ற நிகழ்வுகள் இப்போது அதிகம் இல்லை. காரணம் மதமாற்றிகளின் முக்கியக் குறிக்கோளான பொருளாதாரம் சார்ந்த பங்களிப்புகள் இங்கே அந்த அளவுக்குச் செல்லுபடியாவதில்லை.

கிடைத்த வரை லாபம் என்பதாக மாற்றியவர்களை வைத்துக் கொண்டு கூட்டத்தினரை சேர்த்துக் கொண்டுருக்கிறார்கள். சேர்ந்தவர்களிடம் வசூலிக்கும் தொகையை வைத்துக் கொண்டு இப்போது வழிபாட்டுத் தலங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள். வெளிநாட்டில் இருந்து வரும் நிதி ஒருபக்கம். வசூலிக்கும் நிதி மறுபக்கம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இதற்கு மேலும் வசூலிக்குமபொறுப்பில் இருப்பவர்களுக்கு அந்த மதத்தில் கிடைக்கும் அங்கீகாரம் என்பது கடைசியில் அரசியல் தரகராக மாறும் அளவுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கின்றது. அப்படிச் சென்றவர்கள் தான் இன்றைய மதமார்களும், குருமார்களும், சாமியார்களும்.

திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் உள்தனிநபர்கள் தொடங்கிய ஒரு சிறிய ஜெபகூடம் இரண்டு ஆண்டுகளில் மூன்று கோடி செலவு செய்து கட்டும் அளவுக்குப் பிரம்மாண்ட அளவுக்கு வளர்ந்துள்ளது. சுற்றியுள்ள பொட்டல்காடுகளை மிகக் குறைந்த அளவுக்கு வாங்கி, கிறிஸ்வ மதத்திற்கு மாறுபவர்களுக்கு ஐந்து செண்ட் நிலம் இலவசம் என்ற கொள்கை இன்று அந்தப் பகுதி முழுவதையும் கிறிஸ்துவப் பூமியாக மாற உதவியுள்ளது. வந்து குவிந்து கொண்டுருக்கும் வெளிநாட்டு நிதியென்பது உள்ளூரில் வெறியை உருவாக்க காரணமாக அமைந்து விடுகின்றது.

மொத்தத்தில் மனிதர்களைத் தன்னிலை மறக்கும் அளவுக்கு விபரீத பாதையில் கொண்டு போய்க் கொண்டுருக்கின்றது. நாங்கள் மதவெறியர்கள் அல்ல என்று நாடகமாடும் அரசியல்வியாதிகளின் உதவியோடு ஒவ்வொரு ஊரிலும் இன்று மத ஓநாய்கள் வளர்ந்து கொண்டுருக்கின்றது.

உள் மன ஆதங்கம், ஆதரவற்ற நிலைமை, எதிர்பார்த்த விசயங்கள் நடக்காத போது உண்டான வெறுமை என்று ஒவ்வொன்றாக ஆழ்மனதில் பதிந்து அன்றாட வாழ்க்கையில் சபலத்துடன் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் தான் அதிக அளவுக்கு மதம் மாறுகின்றார்கள். நம்பிய சாமிகள் என்னைக் காக்க வரவில்லை. நம்பிக்கையளித்து எங்களை வாழ்விக்க வந்தவர்கள் தான் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் ன்பதே இன்று மதம் மாறிக் கொண்டுருக்கும் அத்தனை பேர்களின் வாக்குமூலமாக இருக்கிறது. இதில் உண்மைகள் இருந்தாலும் மதம் மாறினாலும் அதில் உள்ள உள்பிரிவுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எங்களை ஒதுக்கினார்கள் என்று சொல்லியவர்களஅத்தனை பேர்களும் வேறொரு ரூபத்தில் ஒதுக்கப்பட்ட வர்களாகத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

இந்து மதத்தில் உள்ள சாதிகளை ஒழித்து விட்டால் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்து விடும் என்பவர்களிடம் மற்ற மதத்தில் உள்ள பிரிவுகளை எப்படிப் போக்குவது என்றால் பதில் ருக்காது. காரணம் இங்கே மதம் ஒரு பெரிய பிரச்சனை இல்லை. தன்னிலை உணர விரும்பாத கூட்டம் தான் இப்போது அதிகமாகிக் கொண்டுருக்கிறது. அரசியலுக்கும், மதத்திற்கும் முக்கியத் தேவையே சுயநினைவு இருக்கக்கூடாது. சுயமாக யோசித்தால் கேள்விகள் வரும். கேள்வி என்றால் அதற்குப் தில் ஒன்று தேவையாய் இருக்கும். பொய், உண்மை என்பதை எளிதாகக் கண்டு கொள்ள முடியும். தொடக்கம் முதலே இதை நம்பு. இதை மட்டுமே நம்பு என்று சொல்லிக் கொடுத்து விடுவதால் எவராலும் மாற்றுப் பாதையை யோசிக்கக்கூட முடிவதில்லை.

மதங்கள் காட்டிய பாதைகள் அப்படியே தான் இருக்கிறது. இடையில் வந்தவர்கள் உருவாக்கிய கொள்கைகள் தான் இன்று உலகத்தை வழிநடத்திக் கொண்டுருக்கிறது. மதங்கள் இருக்கின்ற வரைக்கும் பிரச்சனைகளுக்குப் பஞ்சம் இருக்காது. இதுவொரு மாற்று ஏற்பாடு. ஒன்றை மறக்க மற்றொன்று. அதை மறக்க இன்னோன்று. குறிப்பாக மைனாரிட்டி ஓட்டு வாங்க நினைக்கும் ஒவ்வொரு அரசியல்வியாதிகளுக்கும் சந்தோஷமாகவே இருக்கும். மதத்திற்கு ஒரு தலைவன். அதில் உள்ள உட்பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தலைவர்கள். இறுதியாக மோதவிட்டு அழகு பார்க்கும் போது தேர்தல் காலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம். இன்று இந்தியமுழுக்க இந்த மதக் கலவரத்தின் தொடக்கங்கள் அங்கங்கே தோன்றிக் கொண்டேயிருக்கிறது. பாதிக்கப்படுவது தனி நபர்கள் மட்டுமே. உறவுகளை இழந்து, தனது அடையாளங்களை மறந்து, தன் மொழியை வெறுத்து இறுதியில் எது தனது பாதை என்பதை உணராமல் யாருடைய ஆதாயத்திற்காக நாம் இறந்தோம் என்பதை அறியாமலே இறந்து போனாலும் இந்த மதம் உலகில் கடைசி மனிதன் இருக்கும் வரைக்கும் அழியப் போவதில்லை. மாவட்ட ஆட்சியாளர் பொறுப்பில் இருந்தவர் கூட இது போன்ற கூட்டத்திற்கு ஊர் ஊராகச் செல்லத் துவங்கும் போது கற்ற கல்விக்கும் மனிதனின் உணர்ச்சிக்கும் சம்மந்தம் இல்லை ன்று தான் நினைக்கத் தோன்றுகின்றது.

மனிதர்களின் வக்கிரமான உணர்ச்சிகளை மட்டும் தூண்டுவதற்கு இங்கே சிலர் இருக்கிறார்கள். ஆனால் தூண்டில் புழுவாகவே பலரும் மாறிக் கொண்டுருக்கிறார்கள். ஓட்டுக்காக உங்கள் உரிமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டு வருபவர்களை நன்றாக உற்றுக் கவனித்துப் பாருங்கள். அவர்களின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் அவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் அத்தனை வசதிகளும் உங்களின் சுய உரிமைகளை இழந்ததானால் வந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். (31.08.2013)

License

பயத்தோடு வாழப் பழகிக் கொள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *