21 இட ஒதுக்கீடு – ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை

இன்றைய நவீன விஞ்ஞானம் தந்த ஏவுகணை கூட ஒரு நாட்டின் குறிப்பிட்ட இலக்கை மட்டும் தான் தாக்கும். னால் மதம் என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு மொத்த நாட்டையும் பற்றியெறிய வைக்க முடியும். மனிதர்களால் உருவாக்கப்பட்ட விஞ்ஞானம் அணைவருக்கும் பொதுப்படையான வளர்ச்சியைத் தந்தது. ஆனால் இடையே உருவாக்கப்பட்ட மதங்களோ இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டுருக்கிறது.

ஆனால் இந்திய நாடு மட்டும் இந்த விசயத்திலும் வித்தியாசமானது. மதம் என்ற சொல்லுக்குண்டான வலுவை விடச் சாதி என்ற சொல்லுக்குத் தான் இங்கு வலிமை அதிகம். சாதி என்ற இந்த ஒரு வார்த்தையின் மூலம் மட்டுமே இன்றைய இந்தியாவையே நிலைகுலைய வைக்கமுடியும். இந்தியாவை ஆண்டுக் கொண்டுருந்த ஆங்கிலேர்களுக்குக் கடைசி வரைக்கும் ஆட்சி புரிய உதவி புரிந்ததும் இங்கிருந்த சாதி தான்.

பிரிக்கப்பட்டு இருந்தார்கள். கடைசி வரைக்கும் பிரிந்தே இருந்தார்கள். இன்று வரையிலும் பிரிந்து தான் இருக்கிறார்கள். சுதந்திரம் வாங்கிய போது காந்தி சொன்ன மைனாரிட்டிகளின் உரிமையும் இன்று வரையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தான் இருக்கிறது. சாதியைப் பற்றிப் பேசுபவர்கள் அடுத்து ஆரம்பிப்பது இந்த மைனாரிட்டிகளின் உரிமை என்பதை இந்திய அரசியல்வாதிகளால் அதிகம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் மற்றொரு பொக்ரான் அணுகுண்டு ஒன்று உண்டு. அது இந்தியாவில் உள்ள சாதிகளைப் பற்றிப் பேசுதல் மற்றும் சாதிவாரியான இட ஒதுக்கீடுகளைப் பற்றிப் பேசுதல்.

இந்த ஒதுக்கீடுகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடு சதவிகிதங்களைப் பற்றி முரண்பாடாகப் பேசினால் போதும். நாடே பற்றியெறியத் தொடங்கும். பேசியவரின் தலை இருக்காது. அந்த அரசியல் கட்சியே இல்லாமலேயே கூடப் போய்விடும். சாதிகள் இல்லையாடி பாப்பா என்று சொன்னவர் பாப்பாவுக்கு மட்டும் தான் சொல்லியிருக்கிறார் என்று கணக்கில் எடுத்துக் கொண்டு இன்றைய தலைவர்கள் மறந்து விட்டார்கள்.

சாதி இன்றும் ஆலமரமாக ஏராளமான விழுதுகளுடன் ஆரோக்கியமாகவே இருக்கிறது. இன்று அரசியல் என்ற உரம் போட்டு வளர்த்துக் கொண்டுருக்கிறார்கள்.

இன்றைய இந்திய அரசியலுக்குச் சாதி தான் உயிர் நாடி. இந்தச் சாதி தான் பதவியைத் தருகின்றது. தந்த பதவியை எடுக்க உதவுகின்றது. தரமுடியாத பதவியைத் தந்தே ஆக வேண்டும் நிர்ப்பந்தம் மூலம் பெற முடிகின்றது. இதன் காரணமாகவே சாதிவாரியான ஒதுக்கீடுகளைத் தாண்டி உள் ஒதுக்கீடு என்பது வரைக்கும் வளர்ந்துள்ளோம். இந்திய தலைவர்களில் இந்தப் பொக்ரான் அணுகுண்டின் மேல் ஏறி நின்று பார்த்தவர் முன்னாள் பிரதமர் விபி.சிங்.

மண்டல் கமிஷன்என்ற ஆயுதம் பூமராங் போலவே அவரை உண்டு இல்லையென்று மாற்றிக் கடைசியில் அவரையே நிலைகுலையவும் வைத்துவிட்டது. இதன் காரணமாகவே எந்த அரசியல் கட்சிகளும் முடிந்தவரையிலும் இந்த ஒதுக்கீடு விசயத்தில் வாயைக் கொடுத்து புண்ணாக்கி கொள்ள விரும்புவதில்லை. முடிந்தவரைக்கும் எறியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதைத் தான் எல்லாக் கட்சிகளும் இன்று வரைக்கும் செய்து கொண்டுருக்கிறார்கள்.

ஆனால் உருவாக்கப்பட்ட சாதி வாரியான ஒதுக்கீடுகள் இப்போதைய நிலைமையில் உண்மையான நபர்களுக்குத் தான் செல்கின்றதா?

மைனாரிட்டிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் உரியவர்களுக்குப் பயன்படுகின்றதா?

அப்துல்கலாம் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக ஆனது அவரின் தனிப்பட்ட திறமைகளுக்காக அல்ல. அந்தச் சமயத்தில் அரசியல் கட்சிகளுக்குத் தேவைப்பட்ட மைனாரிட்டிகளின் காவலன்என்ற பட்டத்திற்காகவே முன்னிறுத்தப்பட்டார். எந்த நாட்டிலும் இந்த மைனாரிட்டிகளைப் பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. காரணம் தேர்தல் சமயத்தில் இவர்களின் ஓட்டு தான் முக்கியப் பங்காற்றுகின்றது.

ஆனால் அடுத்த முறை காட்சி ாறியது.

மைனாரிட்டி என்ற வார்த்தை மாறி பெண்ணுரிமை என்று வர பிரதிபா பாட்டீலுக்கு அடித்தது யோகம். இந்தியாவில் உள்ள பதவிகளுக்குத் தகுதி என்பது முக்கியமல்ல. சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் முக்கியத் தேவையாக இருக்கிறது.

அப்துல்கலாமைப் பொறுத்தவரையில் ஒரு விஞ்ஞானிக்கஇந்திய நாடு கொடுத்த கௌரவம் என்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். பிரதிபாவுக்கு என்ன தகுதியிருந்தது? அவரின் தகுதியைத் தான் அணைவரும் பார்த்து விட்டார்களே?

ஜனாதிபதி மாளிகையில் சுவற்றில் அடித்த சுண்ணாம்புகளைத் தவிர அத்தனையும் பதவி காலம் முடிந்ததும் வெட்கப்டாமலதனது வீட்டுக்கு எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.

பெண்ணுரிமைக்கு முன்னுரிமை கொடுக்கின்றோம் என்று சொன்னவர்கள் தான் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய சதவிகிதத்தைக் கொடுக்கவும் மறுக்கின்றார்கள். காலங்கள் மாறும் போது காட்சியும் மாறுகின்றது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் கொள்கைகளைப் புதுப்பித்துக் கொள்கின்றது.

முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் பம்பாயில் கலவரம் நடந்து கொண்டுருந்த போது அவரால் அமைதியாகவே இருக்க முடிந்தது. அத்வானி கரசேவையின் மூலம் இந்தியாவை மத அச்சுறுதலுக்கு உரிய நாடாக மாற்றிய போதும் கூட அமைதியாகவே இருக்க முடிந்தது. ஆனால் ஆண்டது காங்கிரஸ். செய்தது பாரதிய ஜனதா கட்சி. காங்கிரஸ் அமைதியாகத்தான் இருந்தது. இதுவே பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தால் அதன் முகமே வேறு விதமாக இருக்கும். எதைத் தொட்டாலும் அதற்கு மதச் சாயம் பூசப்படும். இன்று வரையிலும் அப்படித்தான் பேசப்படுகின்றது. குஜராத் வரைக்கும்.

இங்கு என்ன பிரச்சனை? என்று எவரும் பார்க்க விரும்புவதில்லை. அது யாரால் என்பது தான் முக்கியமாகப் படுகின்றது. அதை எப்படித் தேர்தல் சமயத்தில் பயன்படுத்தப்படலாம் என்ற யோசனை தான் முன் வைக்கப்படுகின்றது.

ஆனால் ந்தப் பிரச்சனை என்றாலும் அதை முழுமையாகத் தீர்க்கப்படுவதை எவரும் விரும்புவதிலலை. பாரதிய ஜனதா கூட நாங்கள் முழுமையான இந்துத்துவா கட்சி என்று சொல்வதில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மைனாரிட்டிகளின் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று தான் தொடங்குகிறார்கள். காரணம் பயம். இந்தியா ஒரு மதச் சுதந்திர நாடு என்று சொல்லியே மங்கிய ஒளியில் காட்டும் உருவம் போலவே பலதும் தெரிகின்றது. யாரும் வெளிச்சத்தில் நின்று உரக்க பேச முடியாத நிலைமைக்கு வந்துள்ளது. இது தான் இன்றைய அரசியல்வாதிகளுக்குப் பம்பர் பரிசாக இருக்கின்றது.

இந்மைனாரிட்டிகளுக்கு உரிமை என்ற நோக்கத்தில் தான் பல சட்டதிட்டங்கள் வளைந்து கொடுத்துக் கொண்டுருக்கிறது. இன்றைய கல்வியானது அநேக மைனாரிட்டி நிறுவன பெயரைத் தாங்கிக் கொண்டு வியாபாரமாக மாறிவிட்டது.

காரணம் மைனாரிட்டி நிறுவனங்கள் என்றாலே அரசாங்கத்தின் பார்வை வேறுவிதமாக இருக்கிறது. அதுவே மெஜாரிட்டி என்னும் போது தனியாக இருக்கின்றது. சாதாரண மனிதர்கள் சந்திக்கும் எந்தப் பிரச்சனைகளையும் மைனாரிட்டி நிறுவனங்கள் எதிர்கொள்ளத் தேவையில்லை. அதையும் மீறி முறைப்படி சட்டம் தன் கடமையைச் செய்யும் பட்சத்தில் அதற்கு வேறொரு மூலாம் பூசப்பட்டு நோக்கமே வேறொரு திசையில் கொண்டு போகப்படும். இதற்குப் பயந்தே பாதி அதிகாரிகள் கண்டும் காணாமல் ஒதுங்கிப் போய்விடுகிறார்கள்.

இதே மைனாரிட்டி சார்பாகத் தொடங்கும் நிறுவனங்களில் எத்தனை சதவிகிதம் மைனாரிட்டி சமூக மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்க்கை தருகிறார்கள். பட்டியலிட்டு பார்த்தால் அவரவர் பணச் சம்பாத்தியத்திற்கு மட்டும் இந்தப் பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டுருப்பது புரியும். சாதியோ, மதமோ எதுவானாலும் அரசியல் தலைவர்களுக்குக் காசே தான் கடவுளடா?

இதன் தொடர்சசியாகத் தான் இன்று மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவதாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை என்ற நோக்கத்தில் ஒரு சட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது.

உச்சநீதிமன்றம் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டுக் கொண்டேயிருக்க, இந்தப் பஞ்சாயத்தில் இனி நீதிமன்றங்கள் தலையிட தேவையில்லை என்று இந்திய அரசு தனது அரசியல் சாசன சட்டத்தையே மாற்றப் போகின்றது. அதாவது ஒதுக்கீடு மூலம் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அரசுபணியில் இன்று எளிதாக நுழைந்து விட முடிகின்றது. வாழ்க்கையில் மற்றவர்களைப் போல அவர்களும் சரிசமமாக உயர வேண்டும் என்று ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரைக்கும் அத்தனை துறைகளிலும் இந்த இன மக்களுக்காகப் பல சலுகைகள் வழங்கப்பட்டு வந்து கொண்டுருக்கிறது. ஆனால் பிரச்சனை முடிந்தபாடில்லை. இவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் இவர்களின் பதவி உயர்வு ஆதிக்கச் சாதியினரால் தடுக்கப்படுகின்றது எனற கோரிக்கை நீண்ட ாட்களாகவே இருந்து வந்தது.

உத்திரப்பிரதேச நவீன புரட்சித்தலைவி மாயாவதிக்கு இதுவொரு ஆயுதமாகவும் கனவாகவும் இருந்தது. இன்றைய சூழ்நிலையில் அவரது கட்சி தலைகுப்புற கிடந்தாலும் அவரே அங்குள்ள மொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் ரட்சகராக இருப்பதாகப் பரப்பப்படுகின்றது.

ஆனால் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் இருந்த போது இந்த இன மக்களுக்கு இவர் உருப்படியாக என்ன செய்தார் தெரியுமா? உத்திர பிரதேசத்தில் அவர் ஊரெங்கும் உருவாக்கிய அவர் கட்சியின் சின்னமான யானை சிலைகளைத் தான் காட்ட முடியும்.

அவரைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநில கட்சிகளும், ாதி ரீதியான கட்சிகளும் தாழ்த்தப்பட்டவர்களின் காவலன் என்ற பட்டத்தைப் பெற முடிந்தவரைக்கும் முயற்சி எடுத்து வந்தது. இன்று அரசியல் சாசன திட்ட மாறுதல் வரைக்கும் வந்து நின்றுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் அந்தத் துறையில் உச்சகட்ட பதவி உயர்வு வரைக்கும் வரும் அளவுக்கு உண்டான அங்கீகாரத்திற்கு அனுமதி கொடுத்து நிறைவேற்றி உள்ளது.

அதாவது குறிப்பிட்ட துறையில் பணியாற்றும் போது அவருக்குண்டான பணி சார்ந்த திறமைகள் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அவர் இன்ன சாதி என்ற நோக்கம் ஒன்றஅவருக்குப் பதவி உயர்வை தந்து விடும். இது தான் இந்தச் சட்டத்தின் மூலம் கிடைக்கும் பலன்.

அண்ணல் அம்பேத்கார் தொடங்கி வைத்த பயணம் இது. தலித் மக்களின் தலைவர் என்று கொண்டாடப்படும் இந்தத் தலைவர் பெற்ற கல்வியறிவு என்பது அன்றைய காலகட்டத்தில் நினைத்தே பார்க்க முடியாத சாதனை. கல்வியறிவு பெற்று இருந்த போதிலும் கூடத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பாடுபட்ட விதம் தான் குறிப்பிடத்தக்கது.

அடக்குமுறை, ஒடுக்குமுறை, அவமானங்கள் அத்தனையும் தாண்டி வந்த சாதித்த சாதனைகளின் விளைவுகளைத் தான் இன்று ஒடுக்கப்பட்டவர்கள் அத்தனை பேர்களுமசுகவாசியாக அனுபவித்துக் கொண்டுருக்கிறார்கள். ஆனால் தங்களின் உண்மையான விடுதலையென்பது கல்வியின் மூலம் மட்டுமே என்பதை உணர்ந்தவர்களின் சதவிகிதம் குறைவாகவே இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளைத் தாண்டி வெற்றிகரமாகக் கடந்து வந்து விட்டோம்.

இந்த 66 ஆண்டுகளில் ஒவ்வொரு 20 ஆண்டுகளாகக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் இந்த இன மக்களில் மூன்று தலைமுறையாகக் கல்லூரி வரைக்கும் வந்தவர்கள் மிகக் குறைவே. குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரக் காரணங்கள் என்று எத்தனை அடுக்கிப் பார்த்தாலும் தங்கள் வாழ்க்கையை அரசாங்கம் கொடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி மேலே வந்து இருக்க வேண்டும். இன்றைய உண்மையான நிலை என்ன?

ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் வளர்ச்சி பெற்று பெரிய தொழில் அதிபராக இருக்கிறார். மற்றொருவர் கல்வியின் மூலம் அரசாங்கத்தில் நல்ல பதவியில் இருக்கிறார். ஒருவர் இதே அரசாங்கத்தில் கடைநிலை ஊழியராக இருக்கிறார். இது அரசாங்கம் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி மேலே வந்தவர்கள்.

நிச்சயம் இவர்களின் பொருளாதார வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு தனது தலைமுறைகளின் வாழ்க்கையைச் சரியான பாதையில் கொண்டு போக முடியும்.

இதைப் போலவே கூலி வேலை செய்து கொண்டுருப்பவர்களும், அடிப்படை வசதிகள் அற்ற இடங்களில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களும் எனத் தனியான வாழ்க்கை முறையில் வேறொரு கூட்டமும் வாழ்ந்து கொண்டுருக்கிறது.

இவர்களுக்கு இரண்டு பிரச்சனைகள். பொருளாதார வாழ்க்கையும் சுகமாக இருக்காது. தன்னை அடிமைப்படுத்தி வைத்திருப்பவர்களைத் தாண்டியும எதுவும் செய்து விட முடியாது. பெரும்பாலான கிராமங்களின் இன்று வரையிலும் இது தான் நடந்து கொண்டுருக்கிறது. இவர்களின் தலைமுறையும் வேறுவழியே தெரியாமல் இதே பாதையில் தான் வாழ்ந்தாக வேண்டும்.

இது தவிர இந்த ஒடுக்கப்பட்ட மக்களில் வாழ்ந்து கொண்டுருக்கும் நடுத்தர வர்க்கம்.

மேலே சொன்ன மூன்று கூட்டத்திற்கும் இந்த இட ஒதுக்கீடு ஒரே மாதிரியான பார்வையில் தான் வைக்கப்படுகின்றது. அதிகாரியின் மகன் பெற்ற ஒதுக்கீட்டின் காரணமாக வசதியற்ற குடும்பத்தில் உள்ளவனுக்கு எதுவும் போய்ச் சேர்வதில்லை. இது தவிர ஒரு குடும்பத்தில் ஐந்து பேர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அத்தனை பேர்களுக்கும் இந்த வசதிகள் கிடைக்கின்றது. இட ஒதுக்கீடு மூலம் பெற்ற வாழ்க்கைத் தரம் என்பதை அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளாது. சாதி என்பதே எல்லா இடங்களிலும் முன்னிறுத்தப்படுகின்றது.

பொருளாதார ரீதியான பங்கீட்டை அமல்படுத்த எவருக்கும் மனம் இருப்பதில்லை. மொத்தத்தில் முறைப்படியான பங்கீடுகள் இல்லை. சேர வேண்டியவர்களுக்குப் போய்ச் சேரவும் இல்லை. மீண்டும் மீண்டும் அதே சுழல். அதே வாழ்க்கை. அதே கொடுமை. வர்க்கப்போராட்டத்தின் அரிச்சுவடியான வசதியானவர்கள் விட்டுத் தருவதில்லை. வாய்ப்பு கிடைக்காதவன் அடித்துப் பிடுங்குவதும் தவறில்லைஎன்கிற நிலைக்குத் தான் இப்போதுள்ள இட ஒதுக்கீடு அழைத்துச் சென்று கொண்டுருக்கிறது.

பள்ளியில் சலுகை, பள்ளி முடித்த போது கல்லூரியில் சேர சலுகை. கல்லூரி முடித்த போது அரசு பணியில் சேர சலுக. பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வில் சலுகை. இப்போது கூடுதலாகக் குறிப்பிட்ட துறையில் உச்சத்தைத் தொடும் அளவுக்குப் பணித்திறமைகளுக்கு அப்பாற்பட்டுத் தனிச் சலுகை.

இன்றும் சாதீய கொடுமை இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

அதைப் போல அரசாங்கம் கொடுத்த சலுகைகளைப் பயன்படுத்தி மேலே வந்தவர்கள் அத்தனை பேர்களும் அவர்கள் அடைந்த சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் தருகிறார்களா? குறைந்தபட்சம் தங்களது இன மக்களுக்காகத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து அடுத்தவர் மேலேற உதவுகின்றார்களா என்பது தான் இன்று வரையிலும் கேள்விக்குறியாக இருக்கிறது. இன்றும் பார்பனீயம் என்ற வார்த்தை இந்தியாவில் விடாது துரத்தும் கருப்பாக இருப்பதைப் போலவே உயர்படிப்பில் காட்டும் பாரபட்சம் என்பதில் தொடங்கி உள்ளூர் கிராமங்களில் தேர்ந்தெடுத்த தலித் பஞ்சாயத்துத் தலைவர்களைப் பணியாற்ற விடாமல் தடுப்பது வரைக்கும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.

உண்மையான காரணங்கள் எத்தனை இருந்தாலும் இதில் உளவியல் காரணமும் இருக்கின்றது.

3000 வருடங்களாக இந்தியாவில் நடந்து வந்த கொடுமை இது. இன்று வரையிலும் மனிதர்களால் தங்களை மாற்றிக் கொள்ள முடிவதில்லை. ஆண்டாண்டு காலமாகத் தங்களைப் பார்த்து வணங்கிய கூட்டம் இன்று வசதியாகத் தங்களை மாற்றிக் கொள்ளும் போது உருவான ஆதிக்கதீ உள்ளுற கொளுந்து விட்டு எறிந்து கொண்டு தான் இருக்கிறது.

நாடாக இருந்தாலும் வீடாக இருந்தாலும் இன்று பொருளாதாரம் தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. பணம் இருந்து விட்டால் பதவி வந்து விடுகின்றது. பதவி வந்து விட்டால் பழையவை மறக்கப்படுகின்றது. கடந்து வந்த பாதையை மறக்கும் போது தனக்குப் பின்னால் கண்ணீர் வடித்துக் கொண்டுருப்பவர்கள் எவரும் கணகளுக்குத் தெரிவதில்லை. சரி, உதவிகள் தான் செய்யவில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் இட ஒதுக்கீடு சலுகைகளை அனுபவித்து மேலே வந்தவர்களின் வாழ்க்கையோ முற்றிலும் வேறு விதமாக இருக்கிறது.

படித்து மேலே வருபவர்கள் எவரும் நான் இந்த இனத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ள விரும்புவதே இல்லை.

முடிந்தவரைக்கும் தன் இடத்தை, தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளத் தான் விரும்புகிறார்கள். படித்தவர்கள், படித்துக் கொண்டுருப்பவர்கள், பணியில் சேர்ந்தவர்கள், வாழ்வில் உயர்ந்தவர்கள் என்று தெரிந்த வட்டத்தில உள்ளவர்களைக் கணக்கு எடுத்துப் பார்த்தால் அவர்களின் உறவினர்களுக்குக் கூட உதவி செய்யாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

மற்ற காரணங்களை விட இது தான் முழுமையான சுதந்திரம் கிடைக்காமல் இருக்க முக்கியக் காரணமாக இருக்கின்றது. சுதந்திரம் என்பது கொடுப்பதல்ல. தான் உணர்வது. தான் உணர்ந்ததை மற்றவர்களுக்குக் கொடுக்கும் போது தான் அதுவொரு உருவமாக மாற்றப்படுகின்றது. உணரும் போததான் உண்மையான சுதந்திரத்தின் அருமை தெரியும். உணரவும் தெரியாமல் ஒதுங்கவும் முடியாமல் இன்றைய ஒடுக்கப்பட்டவர்களின் வளர்ச்சி வினோத கலவையாக இருக்கிறது.

ஒரு சிலையை உடைத்து விட்டார்கள் என்று எழுச்சியோடு கூடும் கூட்டம் தங்கள் இடங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் தேவை என்பதற்காக அதிக எழுச்சியோடு போராட்டம் செய்வது குறைவாகத்தான் இருக்கின்றது.

எங்கள் பக்கம் ஓட்டுக்குப் பணம் கொடுக்கவில்லை என்று கதறிக் கொண்டு பேட்டி கொடுப்பவர்கள், தகுதி பார்த்துத் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. வலியோடு அதிகம் வாழ்பவர்கள் தாங்கள் செய்யும் சிறிய தவற்றின் வலிமை அடுத்தப் பல தலைமுறைகளுக்கும் கடத்தப்படுகின்றது. தகுதியான தலைவர்கள் உருவாகாமல் போனதற்கு இதுவே முக்கியக் காரணமாக இருந்து விடுகின்றது. இதன் காரணமாகவே இன்று வரையிலும் இந்த மக்களை வெறும் உணர்ச்சிக்கூட்டமாகவே வைத்திருக்க முடிகின்றது.

இன்று வரையிலும் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க இடங்கள் பெரும்பாலான சதவிகிதம் வருடந்தோறும் நிரப்பப்படாமல் தான் இருக்கின்றது. காரணம் கல்வியில் அக்கறையின்மை. தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு எவர் வந்தாலும் ஏற்றுக் கொண்டு கண்மூடித் தனமாக ஆதரவு அளிப்பது என்பது வரைக்கும் போய்க் கொண்டே இருப்பதால் தன்னலமற்ற ஒரு தலைவர் கூட இந்த இன மக்களுக்கு அமையவே இல்லை என்பது தான் உண்மை. முறையான தகுதியுள்ளவர்களுக்கும் இதன் காரணமாகவே வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது.

தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பொதுப்பபடையாகச் சொல்கின்றோமே தவிர அதற்குள் இருக்கும் அத்தனை பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று சேராமல தனித்தனி தீவுகளாகத் தான் இருக்கிறார்கள். அதற்குள்ளும் நான் பெரியவன். நீ எனக்கும் கீழே என்ற ஆதிக்க உணர்வு தான் இன்னமும் இருக்கிறது. பார்ப்னீயத்தைக் கேலி செய்து கொண்டே தங்களையும் ஒரு பார்ப்னீய பாதையில் தான் கொண்டு போய்க் கொண்டுருக்கிறார்கள். இந்திய அளவில், தமிழக அளவில் அத்தனை தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களும் இன்று வரையிலும் தேவதூதர்களாகத்தான் இருக்கிறார்கள். கலவரம் உருவாவதற்கும் காரணமாக இருப்பவர்கள் அத்தனை பேர்களும் கலவரம் அடங்கி உயிர்பலியை வேடிக்கைப் பார்க்கத்தான் வருகிறார்கள். அதுவரையிலும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். பள்ளிக்கூடப் பாடங்களில் முதல் பக்கத்தில் நாம் பார்த்த படித்த வரிகள் மிக முக்கியமானது.

தீண்டாமை பாவச் செயல்.

தீண்டாமை ஒரு பெங்குற்றம்.

தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்.

ஆனால் இப்போது நடந்து கொண்டுருக்கும் சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும் போது இனிமேல் இப்படித்தான் எழுத வேண்டியிருக்கும் போலிருக்கு.

தெளிவற்ற ஒதுக்கீடு பாவச் செயல்,

தேவையற்ற ஒதுக்கீடு ஒரு பெருங்குற்றம்.

தகுதியானவர்களை ஒதுக்குவது மனிதத்தன்மையற்செயல். (05.09.2012)

License

பயத்தோடு வாழப் பழகிக் கொள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *